நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்
*நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!*
’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரி...
