Friday, November 27

Tag: நடிகர் ஆர்யா நடிப்பில்

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில்

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர்...