நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் 'தாஸ் கா தம்கி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ' தாஸ் கா தம்கி'
தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஸ்வக் சென் நடிக்கும் புதிய படத்தி ற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப் பூர் வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற 'ஃபலக்னுமா தாஸ்' எனும் படத்தின் மூலம் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தன் திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக் சென். இவர் கதையின் நாயகனாக முதன் மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்ப ட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துரா...
