நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும்
*நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும் பொருட்செலவில் உருவாகும் பிரம் மாண்டம்!*
அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’ படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.
இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி, மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம...
