’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீப த்தி ல் நடந்தது.
இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வே ண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்க மாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்.
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெய்சன் பேசியதாவது, “’ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் படங்கள் எடுத்தி ருக்கிறோம். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் எடுத்...
