பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!
பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!
இந்திக்கு செல்லும் கடைசி உலகப்போர் திரைப்படம் !! அக்டோபர் 4 ஆம் தேதி வட இந்தியாவில் வெளியாகும் கடைசி உலகப்போர் திரைப்படம் !!
முன்னணி ராப் பாடகர், நடிகர், இயக்குநர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம், தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, வட இந்தியா முழுக்க, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தியில் வெளியாகவுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி, இசையமைத்து உருவாகியிருந்த "கடைசி உலகப்போர்" கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியங்களைத் தந்து, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி...
