பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ படத்தை
பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ படத்தை – Sun NXT-இல், டிசம் பர் 19 முதல் கண்டுகளியுங்கள்
பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது !
தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
...
