பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார்.
கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ரிதா நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சாம் சி.எஸ் பின்னணி இசையமைக்கிறார். பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் ஸ்டண்ட் சில்வா. கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார்.
பாலா-அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படம் என்பதாலும் ஏற்கனவே வெளியான ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்...
