பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!*
*பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!*
*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.*
படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்டார் ஸ்டுடியோ 18 (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெ...

