பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி”
பிரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'' வலைதளத் தொடர் முன் னோ ட்டம் வெளியீடு
'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடருடன் 'உண்மை நடக்கும் ; பொய் பறக்கும் ' என டாக் லைன் இணைக்கலாம் - எஸ் ஜே சூர்யா.
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வ லைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால் வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலை த ள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத் தி ரத் தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர் யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்ம...
