பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
*‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக தனஞ்செயன் சார் படத்தை விநியோகம் செய்கிறார். இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார். தேஜூ அஸ்வினி, ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார், பிந்து மாதவி என நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்தனர். இயக்குநர் மாறன், கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் எனத் தொழில்...
