பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள
பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் "மரகதமலை " ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!!
அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது "மரகதமலை "
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் " மரகதமலை " படம் பிடிக்கும் இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை!!
ஏப்ரல் 3ஆம் தேதி குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது " மரகதமலை " திரைப்படம்
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை "
அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற ப...
