மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம்
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரிசெல்வராஜ்,
"சமூகத்தில் என்னென்னமோ நடக்கிறது. அது எல்லாவற்றையும் பார்க்கின்ற, அனுபவிக்கின்ற மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
அரசியல் கூட்டங்கள் நடக்கிறது, கருத்தரங்கங்கள் நடக்கிறது. இதுபோன்ற பல விஷயங்கள் நடக்கிறது. அதில் சினிமாவும் ஒரு அங்கம்.
சினிமாவிற்கு மட்டும் அதில் தூய்மையான ஒரு பிம்பம் கொடுக்கக்கூடாது. சினிமா என்றா...
