மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*
*மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*
*லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.*
*பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’*
சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.
ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு...
