முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*
*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”.
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
இந்நிகழ்வினில்..
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது..,
இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும...
