மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார்.
மெய்யழகன் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். கடந்த செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அர்விந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியிருந்தாதால் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளையும் ரசிகர்கள் ரசித்து குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சாமி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் படத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசி...
