யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!*
*"யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!*
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசியவர்கள்
தயாரிப்பாளர் மகேஷ்:
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க...
