ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ” கொம்பா “
வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரில்லர் படம் " கொம்பா " ராஜபாரதி இயக்குகிறார் !
ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் " கொம்பா "
Golden Arrow production என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு "கொம்பா" என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.
பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காந்தாரா படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான உக்ரம் ரவி இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்ய புரூஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ராஜ பாரதியும் இசையமைப்பாளர் புரூசும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர்.
செல்வா எடிட்டிங் செய்ய கலை இயக்க...
