வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது
*வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி*
*என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் - அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி*
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி' எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.
'வதந்தி சீசன் 2' இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜு...
