வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக
*வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த 'வேட்ட சாமி': ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்*
*'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி*
வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர்.
தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பா...
