வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்”
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" படத் தலைப்பு "மாவீரா படையாண்டவன்" என பெயர் மாறுகிறது.
வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க ப்ப டும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பா குபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சர ண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க "கவிப்பேரரசு" வைரமுத்து பாடல்கள் எழுத எஸ். கோபிநாத் கேமராவை கையாள "ஸ்டண்ட்" சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நட னம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகி ல் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.
விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு...
