ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’
ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'ஜெயம் ரவி 34'
'டாடா' புகழ் கணேஷ் கே பாபு இயக்குகிறார்'அகிலன்', 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஸ்கிரீன் சீன் மீடியா உடன் இணைகிறார் ஜெயம் ரவி'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி
'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ர...
