ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி
*ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!*
*திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில் ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம்!*
நடுவன் பட இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் ஆல்பம், ஒரு அழகான காதல் கதையைத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன் ரசிகர்களுக்குக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது.
இன்டி மியூசிக் தளத்தில் முதல் முறையாக, ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த இருமொழி காதல் இசைப் பயணம், தமிழில் ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) என்றும், மலை...
