ஹேப்பி ராஜ்” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும்
“ஹேப்பி ராஜ்” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு!
மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் feel-good திரைப்படமான Happy Raj வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.
ஜெயவரதன் தயாரிக்கும் இந்தப் படம் Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மேலும் ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ள இந்தப் படம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் சுவாரஸ்யமான எளிய கதை சொல்லும் முறையால் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்புக்கேற்ப Happy Raj ஆக G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பின் மூலம் அவர் இந்தக் கதாபாத்திரத்தை உயிர...
