2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி”
*2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!*
MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2K காலகட்டத்தின் அழகான நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வா...
