“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”.
இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது. நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம். இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு ...
