ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ திரைப்படமான “ஹனுமான்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது !!
ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ திரைப்படமான "ஹனுமான்", டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது !!
ஏப்ரல் 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், "ஹனுமான்" திரைப்படம் !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹனுமான்' படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது.
அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும்.
'ஹனுமான்' படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அர...