சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் நடிக்கும் “தண்டுபாளையம்”
சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார்நடிக்கும் "தண்டுபாளையம்"
-----------------------------------------------
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை, குற்றம் போன்ற செயலை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கிறது.
இதில் ஒரு கூட்டத்தை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள்,
108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை.
குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு
ஆளாகிறார்கள்
இவ்வா...