Saturday, August 15

உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல்

உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது..

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது.

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை..

கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகுப்பந்தயம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்:

சூரி,  * சுஹாஸ்,  * மஹிமா நம்பியார்,  * சத்யராஜ்,  * ரவீந்திர விஜய்,  * அச்யுத் குமார்,  * பாலா சரவணன்,  * மிதுன்,  * கீர்த்திகா, 

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான

“ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment Pvt. Ltd.)” நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.

கடினமான கடலோர சூழல்களில் படமாக்கப்பட்டுள்ள ‘மண்டாடி’, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தின் மூலம் ரசிகர்களுக்கு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

“உசுரே நீதான் புள்ள” எனும் இனிமையான காதல் பாடல் வெளியாகியுள்ளது. சூரி மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல், காதல் மற்றும் இருவருக்கிடையேயான அழகான இணைப்பை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது.

இதமான Melody + மனதை தொடும் வரிகள் மற்றும் கதாநாயகன்–கதாநாயகியின் அழகான கெமிஸ்ட்ரியுடன் உருவாகியுள்ள “உசுரே நீதான் புள்ள”, கேட்பவர்களின் மனதில் காதலின் அழகை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது..

சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள – என மயக்கும் பாடல் வரிகளில் – உசுரே நீதான் புள்ள – ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகள் எழுத, கபில் கபிலன்,சஞ்சனா அவர்கள் பாடியுள்ளனர்..

மண்டாடி செப்டம்பர் 10,2026 திரையரங்கில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *