Sunday, October 26

*லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்*

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதி, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் பெகாசஸ் எலியட் மெக்கன்சி பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “HANDS OF FORGOTTEN FACES” புத்தகத்தை வெளியிட்டார்.

ஒரு தமிழ் கவிதை நூல் மொழிபெயர்ப்பு கவிதை நூலாக முதல் முதலாக லண்டனில் வெளியாவதற்கு வாழ்த்துகளை மாண்புமிகு முதல்வர் தெரிவித்தார்.