Monday, July 20

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ படத்தின் முதல் பார்வை*

நடிகர் கிஷன் தாஸ் நடிக்கும் ‘சி யூ- See U’ படத்தின் First Sight – முதல் பார்வை வெளியீடு*

*நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ படத்தின் முதல் பார்வை*

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கிஷன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சி யூ’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சி யூ – See U’ திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா ஏ கே, எம். எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார் கள்.

 

சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெனம் இசையமைத்திருக்கிறார். சரவணன் வசந்த் கலை இயக்கத்தை கவனிக்க என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் ஹெச். ரியா மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.‌

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்.. இதன் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.‌ இதில் வாழ்க்கையில் அதிசயத்தை நிகழ்த்தும் ஒரு பார்வை- ஒரு வார்த்தை -ஒரு சிறிய புன்னகை- ஃபுல் ஸ்டாப்- கமா- அன்பு- நம்பிக்கை- போன்ற அர்த்தமுள்ள உரையாடல்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *