Sunday, July 19

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், துணைத் தலைவர் திரு. கமலக்கண்ணன், திரு.ஆர்.கே.சுரேஷ், செயலாளர் திரு. கதிரேசன், பொருளாளர் திரு. சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக இன்று 16.7.2026 சென்னை தனியார் ஹோட்டலில் திரைத்துறை சம்பந்தமாக மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. சுரேஷ் கோபி அவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அதில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி, ஆந்திரா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கர்நாடகா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *