Wednesday, September 16

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும்

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் “இராவணன் சோலையில் சிவன் மலை”.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக் கோவிலில் இனிதே நடைபெற்றது இந்தத் துவக்க விழாவில் இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், இயக்குநர் ஞான ராஜசேகர், இயக்குநர் பாணர், தயாரிப்பாளர் எஸ்.கே. ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற படம் இனிதே துவங்கியது.

தென்னகத்தில் பல மலைப் பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது.

இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீசத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம்படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன்
சண்டை இயக்கம் – மைக்கேல்
பத்திரிக்கை தொடர்பு – டைமண்ட் பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *