விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ்
*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
*விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ் பிரம்மாண்ட அறிவிப்பு!*
*யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு - அறிமுக இயக்குநர் சித்தார்த் கூட்டணி; புதிய கமர்ஷியல் படம் தொடக்கம்!*
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷி...









