டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நாகன் தாங்கல் ஏரியை புத்துயிர் பெறச் செய்து me
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நாகன் தாங்கல் ஏரியை புத்துயிர் பெறச் செய்து செழிப்பான சுற்றுச்சூழலுக்கு உதவும் நீர்வளமாகவும், மக்கள் நல்லுறவைப் பேணும் சமூக மையமாகவும் மேம்படுத்தி இருக்கிறது!
சென்னை, அக்டோபர் 23, 2025:- உலகளாவிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக முன்னணி வகிக்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் [Tata Communications], பிச்சாண்டிகுளம் வனத்துடன் (Pitchandikulam Forest) இணைந்து, தமிழ்நாட்டின் பொத்தூர் போத்தூர் ஊராட்சியில் உள்ள உப்பரபாளையம் கிராமத்தின் நாகன் தாங்கல் ஏரியை தூர் வாரி சீரமைத்திருக்கிறது. இதன் மூலம் நீண்டகாலமாக பயனற்ற நிலையில் இருந்த நாகன் தாங்கள் ஏரி இப்பொழுது பல்லுயிர்களுக்கான ஒரு செழிப்பான சுற்றுச்சூழலையும், இப்பகுதியிலுள்ள மக்களுக்கு நீர்வள ஆதாரமாகவும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த மாபெரும் தூர் வாரும் முயற்சியின் மூலம், நீர் வள பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம...









