இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் பி. சக்திவேலன் (சக்தி பிலிம் பேக்டரி)
*இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் பி. சக்திவேலன் (சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோர் இன்று அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாட்டை தொடங்கி வைத்தனர்!*
மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவம் காப்போம் என்பதை நோக்கமாகக் கொண்டு அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாடு இன்று விமர்சையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அங்கு சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது, “அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள...









