Thursday, November 19

TAMIL

மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை
ACTRESS GALLERY, INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை

*’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!* ’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும். ‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்ப...
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*

*இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்* இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து அவரை கவனித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, பாரதிராஜா குடும்பத்தினர்...
தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!*
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES, TRAILOR LAUNCH

தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!*

தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!* “டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சா...
பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று

*பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு* *“தி பெட்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க பலர் தயங்கினார்கள்” ; இயக்குநர் மணிபாரதி* *“ஐடி இளைஞர்களை தவறாக காட்டவில்லை” ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி* *ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் நாயகி புரமோஷனுக்கு வந்திருப்பாரோ என்னவோ ? ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி ஆதங்கம்* வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.   இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்ய...
கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம்
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம்

*கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!* முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் ...
மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்
FLASHNEWS, KANNADA MOVIES, KARNATAKKA, TAMIL

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்

*மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* *பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் ...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின்
ASSOCIATION, FLASHNEWS, TAMIL, TAMILNADU

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.12.25) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு. அஜய் ரத்தினம், திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமசந்திரன். நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.அனந்த நாராயணன், திரு. தாசரதி, திருமதி. சபிதா, நடிகர் திரு. விஜய் முத்து ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். # தென்னிந்திய நடிகர் சங்கம்...
நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –
FLASHNEWS, PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சே துபதிக்கா க பாடிய பாடல் - 🎵டிரை ன் படத்தின் கன்னக்குழிக்காரா !!* *🎶 நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழி க்காரா” வைரல் பாடல் !!* தென்னிந்திய சினிமாவில் முன் னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமா...
OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற
ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற

OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்! தியேட்டர்களுக்கு இணையாக தற்போது ஓடிடியும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்திய ரசிகர்களின் வாழ்வில் மாறிவிட்டது. அந்தவகையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், இணையத்தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் Filmfare நிறுவனம் சமீபத்தில் 2025ஆம் ஆண்டிற்கான OTT விருது வழங்கும் விழாவை மும்பையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. ஆலியா பட், விக்கி கெளசல், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், தமிழ் சினிமா இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் விருது பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. மாதவன், ஃபாத்திமா சனா ஆகியோர் நடிப்பில் விவேக் சோனி இயக்கி, நெட்பிளிக்ஸ் OTT-ல் நேரடியாக வெளிவந்த Aap Jaisa Koi என்ற பாலிவுட் படத்திற்காக சிற...
மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!

தலைப்பு 1: மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.! தலைப்பு 2: "ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் தவம்!": திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி தலைப்பு 3: "எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் என்பது மண்ணின் இசை வரலாறு!": இயக்குநர் சீனு ராமசாமி "ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது. இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்...