மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
*‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தயாரிப்பாளர் தனஞ்செயன், “எப்போதும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகர் கிச்சா. இந்தப் படத்திற்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு அசுரத்தனமானது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்ஷன் படமாக ’மார்க்’ இருக்கும். மற்ற நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள். அஜனீஷூடைய இசை படத்திற்கு பெரும் பலம். அணியினருக்கு வாழ்த்துக்கள்!”
தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃ...









