ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR, TRAILOR LAUNCH
விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடுரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், '' தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார...








