யோகி பாபுவின் 300-வது திரைப்படம்
*யோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!*
Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S, தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்...









