அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு
*அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !*
மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நி...
