இன்று பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள்.
பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் பிறந்தநாளில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் தங்கச் சங்கிலி அன்பளிப்பு!
இன்று பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள். அவர் 100 படங்கள் தாண்டி இசை அமைப்பதைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளில் அவரது இசையில் தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் பின்னணிப் பாடகர் வேல்முருகன் '100 ஃபிலிம்ஸ் ஜீ.வி சார் ' (100 Films GV Sir)என்ற முத்திரை பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமாருக்குத் தனது அன்பின் அடையாளமாக அணிவித்தார். அப்போது வேல்முருகனின் மகளும் இசையமைப்பாளர் என். ஆர் ரகுநந்தனும் உடன் இருந்தனர்.
இன்று நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனிப்பெயர் பெற்றிருக்கும் வேல்முருகன் ஏற்கெனவே சில திரைப்படங்களில் பாடியிருந்தாலும் ஜீ. வி. பிரகாஷ் வாய்ப்பு கொடுத்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தான் பெரிய வெளிச்சம் கிடைத்து ஓர் அங்கீக...
