இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,
புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!
சென்னை/புதுச்சேரி
பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய "சினிமாவின் ஆன்மா" (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார்.
இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு:
நூலின் முக்கிய நோக்கம்:
* பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது க...
