உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக் கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிரு க்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநி தி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இய க்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நா யகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்தி ருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வே டத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புக...
