தமிழ் புத்தாண்டை முன்னிட்டு
*தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி
மஜீத் இயக்கத்தில், விமல், யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் கரம் மசாலா ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு..*
*கரம் மசாலா திரைப்படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...*
விமல் நடிப்பில் முழுமையான காமெடிப்படம், கரம் மசாலா தற்போது இறுதிக்கட்ட பணிகளில் !!
நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக உருவாகியுள்ள கரம் மசாலா படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாராணமாக வீடு , திருமணம்,தொழில் அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது....