எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் நடத்தும் விருதுகள் வழங்கும் விழா
எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் நடத்தும் விருதுகள் வழங்கும் விழா. படைபாளர்களுக்கு விருதுகள் மஹாராஷ்டிர மாநில ஆளுநர் பங்கேற்பு.
இந்த பல்கலை கழகத்தில் உலக அளவிலே, இந்திய அளவிலே எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாடு போற்றுகிற வகையில் இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க உலக தமிழர்கள் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டும். எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் பெருமிதம்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம்.
தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல்...
