கங்குவா’ படத்தில் பாபி தியோலின் ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் வெறித்தனமான புது போஸ்டர்
கங்குவா' படத்தில் பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் வெறித்தனமான புது போஸ்டர்
*ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தில் இந்தி சினிமாவில் புகழ் பெற்ற பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் வெறித்தனமான புது போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது!*
நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான 'கங்குவா'வின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.
ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் 'சிங்கம்', 'பருத்தி வீரன்', 'சிறுத்தை', 'கொம்பன்', 'நான் மகான் அல்ல', 'மெட்ராஸ்', 'டெடி', சமீபத்தில் வெளியான 'பத்துதல' போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன், சூர்யா நடிக...
