குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும்
குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா !!
தமிழ் சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கவனம் ஈர்த்து வருபவர் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா. முன்னணி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் தி கோட் லைஃப் பட ஒளிப்பதிவாளர் KS சுனில் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம், சிம்பு நடித்த பத்து தல, செல்வராகவன், நட்டி நடித்த பகாசூரன், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ போன்ற படங்களில் பண...
