Thursday, April 16

Tag: சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள்

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள்
AUDIO/VIDEO ALBUM, PREVIEW, TAMIL, TAMILNADU

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள்

*இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்* *சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்* *வணக்கம் வணக்கம் பெங்களூர் மிகப்பெரிய வெற்றி; அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” விரைவில்* தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர். வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளம், கன்னடம் மற்றும...