சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது
*சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு*
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்ஃபுளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் இளையராஜா, "தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார்.
எடிட்டர் ராம் கோபி, " வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்".
பாடலாசிரியர் ஜெயந்தி, " இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்".
கலை இயக்குநர் சம்ப...
